ஆன்மீகம்
புரட்டாசி 2025: முதல் நாளில் பெருமாளை வழிபட வீட்டில் வாங்க வேண்டிய 3 சிறப்பு பொருட்கள்!

பெருமாளை வழிபட மிகவும் சிறப்பான மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதம் இந்த ஆண்டில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஆரம்பமாகிறது. வழக்கமாகவே ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதத்தின் முதல் நாள், இந்த ஆண்டு மிகப்பெரிய புண்ணிய நாளாக அமைந்துள்ளது.
ஏனெனில் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் நாள் இந்திரா ஏகாதசி விரதம் மற்றும் புதன்கிழமை ஒரே நாளில் வருகிறது. புதன் கிரகத்திற்குரிய மாதம் புரட்டாசி என்பதால், இந்த நாள் பெருமாள் வழிபாட்டுக்கு மிகச் சிறப்பான நாளாகும்.
புரட்டாசி மாதத்தில் எந்த வடிவத்திலான பெருமாளையும் வழிபடலாம். குறிப்பாக திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், நாராயண நாம ஜபம் செய்வதும் பெருமாளின் அருளையும் புண்ணியத்தையும் பெற்றுத் தரும்.
புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் வீட்டில் வாங்கி வைக்க வேண்டிய மூன்று சிறப்பு பொருட்கள்:
கல் உப்பு – மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் கல் உப்பு, வீட்டில் நன்மை மற்றும் செழிப்பை தரும்.
பச்சை கற்பூரம் – பெருமாளுக்கும், மகாலட்சுமிக்கும், குபேரருக்கும் பிடித்த பொருள். இதன் வாசம் வீட்டில் தெய்வீக சக்தியை கூட்டி, தீய சக்திகளை விலக்கும்.
துளசி இலைகள் – பெருமாளுக்கு மிகவும் விருப்பமானது. துளசி மாலையால் பெருமாளை அலங்கரித்து, துளசி தீர்த்தத்துடன் வழிபடுவது மிகப் பெரிய புண்ணியத்தை அளிக்கும்.
இந்த மூன்று பொருட்களையும் பூஜை அறையில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட்டால், வீட்டில் மகாலட்சுமியின் அருளும் பெருமாளின் பாக்கியமும் ஆண்டு முழுவதும் நிலைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.





















