சினிமா செய்திகள்
சூர்யா காட்சியின்போது தீப்பிடித்த திரை: ‘விக்ரம்’ படம் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் திரையரங்கில் திரையிடப்பட்டபோது சூர்யாவின் காட்சியின் போது திடீரென திரையரங்கின் திரையில் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அருகே காலப்பட்டு என்ற பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் நேற்று இரவு ‘விக்ரம்’ திரைப்படம் திரையிடப்பட்டு கொண்டிருந்தது. ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது கிளைமாக்ஸில் அனைவரும் எதிர்பார்த்த சூர்யாவின் காட்சி வந்ததும்.
அப்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் சூர்யாவை திரையில் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென திரையில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் திரையரங்கை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்கள்.
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும் திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘விக்ரம்’ படத்தில் சூர்யா வரும் ஐந்து நிமிடங்கள் ஃபயர் போல் இருக்கும் என்று ரசிகர்கள் கூறிய நிலையில் உண்மையிலேயே திரையரங்கில் ஃபயர் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.