Connect with us

ஆரோக்கியம்

உங்கள் ரத்தத்தை சுத்தம் செய்யும் பூண்டு!

Published

on

உங்கள் ரத்தத்தை சுத்தம் செய்யும் பூண்டு! | Simple Home Remedies to Detoxify your Blood in Tamil

நெஞ்சுச் சளி குணமாக

பூண்டைத் தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் நெஞ்சுச் சளி குணமாகும்.

வாய்ப்புண்ணுக்குக் கொப்பரை தேங்காயைக் கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து, அதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

நார்த்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கி ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

பூண்டின் நன்மைகள்:

இரத்தத்தை சுத்திகரிப்பு செய்கிறது. ரத்தநாளங்களில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தவோட்டத்தைச் சீராக்குகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

சளி மற்றும் காய்ச்சல் வராமல் பாதுகாக்கிறது. மூளையில் புற்றுநோயைத் தடுக்கிறது. பெண்களுக்கு இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும். சிறந்த ஆண்டிபயாடிக் ஆக இருப்பதால் நோய்களைத் தடுக்கிறது.

இதயம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. மாரடைப்பைத் தடுக்க உதவுகிறது. நுரையீரல், புராஸ்டெட், மார்பகம். வயிறு, குடல் ஆகிய உறுப்புகளில் வரும் புற்றுநோயைத் தடுக்கிறது.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. வாயு பிரச்சனையை போக்குகிறது. கல்லீரல் சேதத்தைத் தடுக்கிறது.

தினமும் உண்ணும் பூண்டின் பலன்கள்:

காட்டேரிகளை விரட்டக்கூட பூண்டு போதும் என்ற பழங்கால கூற்றுக்கேற்ப பல நன்மைகளைக் கொண்டது பூண்டு. இதய நோய்கள், நீரிழிவு நோய்களை கட்டுக்குள் வைத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த இதனை தினமும் எடுத்துக்கொள்ள உடல் எடையும் குறையும். ஒவ்வொரு நாளும் 1-3 பூண்டு உட்கொள்ள நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எப்படிச் சாப்பிட்டால் பலன்?

பூண்டு ஆண், பெண் இருவருக்குமே பாலியல் உறுப்புகளுக்கு இரத்தவோட்டத்தை அதிகரித்து தாம்பத்திய உறவைச் சிறப்பாக்குகிறது. ஆண்களுக்கு இதய – ரத்தநாள செயல்பாட்டை வலுப்படுத்தி, விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. ஆனால், ஒரே நாளில் இதெல்லாம் நடந்து விடாது. பூண்டு பச்சையாக (சில பற்கள்) தினசரி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் பலன் கொடுக்க தொடங்கும். பாலிலும் போட்டுக் குடிக்கலாம் என்கிறது ஆய்வு முடிவு.

பூண்டு உடல்நலத்துக்கு நல்லது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், தம்பதியரின் தாம்பத்திய உறவு சிறக்கவும் பூண்டு உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பூண்டில் உள்ள அல்லிசின் என்ற உட்பொருள் பாலுறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறதாம். இதனால் உடலுறவு செயல்பாடும் சிறப்பாக அமைகிறது. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இது பலனளிக்கிறது.

பூண்டு உரிக்கச் சிரமமா? – அசத்தலான டிப்ஸ்..

பூண்டு உரிக்க சிரமமாக இருக்கிறதா? தேவையான பூண்டு பற்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும். சூடு ஆறியதும் கைகளால் கசக்கினால் போதும். சுலபமாக பூண்டு தோல்கள் உரிந்து வந்துவிடும். மொத்தமாகப் பூண்டுகளை எடுத்து தோலை உரித்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.

முகப்பருவைப் போக்கப் பூண்டு:

பூண்டு தோலில் இருக்கும் அல்லிசின் எனப்படும் அர்கனோசல்பர் கலவை பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தி கொண்டது. எனவே, பூண்டு தோலில் பேஸ்ட் செய்து, அதனுடன் ரோஸ் வாட்டக் கலந்து பருக்கள் இருக்கும் பகுதியில் போட்டு சிறிது நேரத்தில் முகம் கழுவவும்.

இது பருக்களை நீங்குவதுடன் முகத்தில் தோன்றும் வீக்கம், சிவந்த தன்மையைக் குறைக்க உதவியாக இருக்கும். (குறிப்பு: எல்லாருக்கும் ஏற்றது அல்ல. எனவே அதிக அரிப்பெடுத்தல் உடனடியாக கழுவி விடவும்)

மேலும் செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?