இந்தியா
நிர்மலா சீதாராமன் அதிமுக எம்பிகள் பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கிறார்: ராகுல் கடும் சாடல்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஜனவரி 8-ஆம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத்தொடரில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபடுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து பாஜக, தமிழக எம்பிக்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தை மறைமுகமாக முடக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று ரஃபேல் போர் விமானம் வாங்க ஒப்பந்தம் போட்டதில் நடந்த ஊழல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது மேகதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்பிகள் பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார். நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர். அவர்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர். அவரது துறையில் நடந்த ஊழல் குறித்து விவாதிக்கும்போது தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

















