சினிமா
பக்தி பாடலாக மாறிய ‘நிலா அது வானத்து மேலே’- இந்த வீடியோ பாருங்க…

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து உருவான திரைப்படம் நாயகன். தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு பின்னரே மணிரத்னம் இந்திய அளவில் பிரபலமானார். இப்படத்தில் கமல்ஹாசனின் சிறப்பான நடிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டது. இப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும் அவர் பெற்றார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த பாடல்கள் அத்தனையும் செம ஹிட். மேலும், பின்னணி இசையிலும் மனதை வருடியிருப்பார் இளையராஜா.
இப்படத்தில் இடம் பெற்ற ‘நிலா அது வானத்து மேலே’ பாடல் மிகவும் பிரபலமானது. இப்பாடலை இளையராஜா பாடியிருப்பார். பல வருடங்கள் கழித்தும் இப்பாடல் ரசிகர்களை கவரும் பாடலாக இருக்கிறது. உண்மையில் இப்பாடல் முதலில் ஒரு மெலடி பாடலாகத்தான் உருவாகியதாம். ஆனால், மணிரத்னம் விருப்பத்தால் அப்படல் குத்துப்பாட்டாக மாறியதாக இளையராஜா கூறியிருந்தார்.,
இந்நிலையில், வங்காலி மொழியில் இப்பாடல் தற்போது நவராத்திரி ஸ்பெஷல் பக்தி பாடலாக மாறியுள்ளது. இந்த பாடலை தமிழ் மற்றும் ஹிந்தியில் ரேப் பாடல்களை பாடி அசத்திய உஷா உதுப் பாடியுள்ளார்.
இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு…