வணிகம்
இனி அமேசானில் விற்க மாட்டோம்; நைக் அதிரடி முடிவு!

விளையாட்டு வீரர்கள் அதிகம் பயன்படுத்தும் ஷூ-க்களை விற்பனை செய்து வரும் நைக் நிறுவனம் அமேசான் இணையதளத்தில் 2017-ம் ஆண்டு முதல் நேரடியாக தங்கள் பொருட்களை விற்பனை செய்து வந்தது.
இந்த சமயத்தில் சோதனை முயற்சியாக அமேசான் நேரடியாக நைக்கிடமிருந்து பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்து வந்தது. இதனால் நைக் பொருட்களை மூன்றாம் நபர்களிடமிருந்து வாங்குவது தவிர்க்கப்பட்டது.
இதன் மூலம் மூன்றாம் தரப்பிலிருந்து பொருட்கள் வாங்குவதை முழுமையாகக் குறைக்க முடியும் என்று அமேசான் திட்டமிட்டு இருந்தது.
ஆனால் அதற்கு எதிராக நைக் நிறுவனம் விரைவில் அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் தங்களது தயாரிப்புகள் விற்பனை செய்யப்படாது என்று தெரிவித்துள்ளது. இது அமேசானுக்கு பெறும் பின்னடைவாக அமைந்துள்ளது.


















