இந்தியா
கேரளாவில் இரவு ஊரடங்கு: மாநில அரசு அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிகிரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மட்டுமின்றி ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 19 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து கேரளாவில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கேரளாவில் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், பொதுமக்கள் இந்த ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.











