வணிகம்
தங்க நகைக்கடனுக்கு புதிய கட்டுப்பாடுகள் – ரிசர்வ் வங்கியின் 9 முக்கிய வழிகாட்டுதல்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!
Published
8 மாதங்கள் agoon
By
Poovizhi
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்க நகைக்கடன்களுக்காக 9 முக்கிய அம்சங்களைக் கொண்ட புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது, தங்க அடகு கடன்களை நம்பி வாழும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
🔸 புதிய வழிகாட்டுதல்கள்:
இதுவரை தங்கத்தின் மதிப்பில் 90% வரை கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைக்கு அதிகபட்சமாக ரூ.75,000 மட்டுமே கடன் பெறலாம்.
மேலும், தங்க நகை உண்மையில் அவர்களுக்கே சொந்தமானது என்பதை நிரூபிக்கும் வகையில், வாங்கியதற்கான அசல் ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நபர் அதிகபட்சமாக 1 கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடகு வைக்க அனுமதி உண்டு.
அதேபோல், கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்கத்தின் தரத்தை பரிசோதித்து, அதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
🔸 முன்பு இருந்த சிக்கல்களுக்கு மேலாக:
சில மாதங்களுக்கு முன்பு, கடன் காலக்கெடு முடிந்தபின் வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பிக்கும் நடைமுறை நீக்கப்பட்டது. இப்போது, முழு தொகையைச் செலுத்திய பிறகே மீண்டும் நகை அடகு வைக்க முடியும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதனால், பலர் அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
🔸 பொதுமக்களின் வேதனை:
“ஆண்டுகள் கடந்த நகைகளுக்கு ரசீது எங்கே கிடைக்கும்? நகையின் தூய்மைக்கான சான்றிதழை எப்படி பெறுவது?” என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விதிமுறைகள் அவர்களை மீண்டும் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் அடகு கடைகளை நோக்கி தள்ளும் அபாயம் உள்ளது என அவர்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும், வெள்ளி பொருட்கள் அடகு, 22 காரட் தங்கத்தின் விலை அடிப்படையில் மதிப்பீடு, 7 நாட்களுக்குள் நகை திருப்பி கொடுக்காவிட்டால் அபராதம் போன்ற விதிகளும் இதில் அடங்குகின்றன.
மக்களின் வாழ்க்கைநிலை, பொருளாதாரச் சிக்கல்களை கருத்தில் கொண்டு நடைமுறை சாத்தியமான தீர்வுகளை அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

ஓய்வூதியதாரர்களுக்கு RBI-யின் புதிய பாதுகாப்பு விதி: முன்அறிவிப்பின்றி கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்ய வங்கிகளுக்கு தடை!

FD முதலீட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வட்டி விகித விதிகளில் மாற்றம் செய்ய RBI புதிய முன்மொழிவு!

ரிசர்வ் வங்கியின் புதிய நகை கடன் விதிகள்: தங்கத்துடன் வெள்ளியையும் அடமானம் வைத்து கடன் பெறலாம்!

















