சினிமா செய்திகள்
அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் குறித்து இன்று முக்கிய அப்டேட்!

அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அந்த படம் குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் பிங்க். அந்த படத்தின் தமிழ் மொழி ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.
தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாரிகி வரும் இந்தப் படத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், பிக்பாஸ் அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். எச்.விநோத் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அண்மையில் இந்த படத்தில் இடம்பெறும் வானில் இருள் மற்றும் காலம் பாடல் உள்ளிட்டவையும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
ஆகஸ்ட் 15-ம் தேதி நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அப்டேட் உள்ளது என்று படத்தின் தயாரிப்பாளரும், மறைந்த ஸ்ரீதேவியின் கனவருமான போனி கபூர் தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
#NerkondaPaarvai update today evening at 6 pm. #Ajithkumar#HVinoth
@ZeeStudiosInt #AjithKumar #HVinoth @BoneyKapoor #BayViewProjects @SureshChandraa @ShraddhaSrinath @thisisysr @nirav_dop @ProRekha @DoneChannel1 @zeemusicsouth @ZeeMusicCompany pic.twitter.com/1zhSvlYV3l— Boney Kapoor (@BoneyKapoor) July 15, 2019