Connect with us

இந்தியா

26 வயது பெண்ணிடம் ரூ.7.5 லட்சம் மோசடி.. வங்கி ஊழியரே செய்த அதிர்ச்சி முறைகேடு..!

Published

on

மும்பையில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைன் பரிமாற்றத்தின் போது ரூ.7.5 லட்சத்தை இழந்ததாகவும் இந்த மோசடிக்கு வங்கி ஊழியரே காரணம் என்றும் செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதான ஒரு முறையாக இருந்தாலும் இதில் மிக எளிதாக மோசடி செய்வது நடந்து வருவதால் வங்கி வாடிக்கையாளர்கள் அவ்வப்போது பணத்தை இழந்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மும்பையில் 26 வயதான பெண் ஒருவர் வங்கி ஊழியரால் 7.5 லட்சத்திற்கும் மேல் ஏமாற்றப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் 26 வயது பெண் ஜானகி என்பவர் கணக்கு வைத்திருந்தார். இவர் அவ்வப்போது வங்கிக் கிளைக்கு செல்லும் போது பேமெண்ட் ஃபார்மை நிரப்ப உதவி செய்யுமாறு வங்கி ஊழியர் ஒருவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கு மற்றும் அவரது விவரங்களையும் அந்த வங்கி ஊழியர் தெரிந்து வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஜானகிக்கு தெரியாமல் அந்த வங்கி ஊழியர் அவரது கணக்கிலிருந்து பண மோசடி செய்ததாக தெரிகிறது. ஒவ்வொரு முறையும் அந்த பெண் பரிவர்த்தனைக்காக வங்கிக்கு செல்லும் போதெல்லாம் அந்த வங்கி ஊழியர் வலிய சென்று உதவி செய்ததாகவும் பரிவர்த்தனையை முடிக்க ஓடிபி உள்ளிட்டவற்றை அவரே அந்த பெண்ணின் தொலைபேசியில் பார்த்து தெரிந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜானகி தனது வங்கி கணக்கில் உள்ள இருப்பை சரிபார்த்த போது ஐந்து லட்சம் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அந்த வங்கி ஊழியரிடம் கேட்டபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறைவாக காட்டலாம் என்றும் சரி செய்தவுடன் ஸ்டேட்மென்ட் அனுப்புவதாகவும் கூறியிருந்தார். இதனை எடுத்து அவர் அனுப்பிய ஸ்டேட்மெண்டில் 12 லட்சம் இருப்பு இருப்பதாக தெரிந்தது.

ஆனால் சந்தேகம் அடைந்த ஜானகி வங்கி மேலாளரை சந்தித்து தனது வங்கி அறிக்கை கேட்டபோது அவர் உண்மையான வங்கி அறிக்கை எடுத்துக் கொடுத்த போது அதில் ஐந்து லட்சம் மட்டுமே இருப்பு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரது வங்கி கணக்கிலிருந்து 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்த வங்கி ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து தங்களது வங்கி விவரங்களை வங்கி ஊழியர் ஆக இருந்தாலுமே அவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என தெரிய வருகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?