தமிழ் பஞ்சாங்கம்
அறிந்ததும் அறியாததும் – சந்திராஷ்டமம் என்றால் என்ன?

ஒருவரின் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் கோட்சார சந்திரன் வருமானால் அதுவே சந்திராஷ்டம காலமாகும்.
பொதுவாக எட்டாமிடம் என்பது சில தடைகள், தாமதங்கள், துயரங்கள், மனசஞ்சலங்கள், இடையூறுகள் ஏற்படுத்தும் இடமாகும்.. சந்திரன் மனோகாரகன் என்பதால் அன்று சஞ்சலங்கள் காரியத்தடைகள் மற்றும் நமது எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை ஆகியவை காணப்படும்.
ஆகையால்தான் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுப காரியங்களை யாரும் செய்ய மாட்டார்கள். திருமணம், கிரகப்பிரவேசம், வளைகாப்பு மற்றும் பிற சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது. முக்கிய பேச்சுவார்த்தைகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான 2ம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.
ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் அமைதியாகவும் இறை சிந்தனையுடன் இருப்பதே நன்மை பயக்கும்.
| உங்களின் ஜென்ம .நட்சத்திரம் | உங்களின் சந்திராஷ்டம நட்சத்திரம் |
| அஸ்வினி. | அனுஷம் |
| பரணி. | கேட்டை |
| கார்த்திகை. | மூலம் |
| ரோகிணி. | பூராடம் |
| மிருகசீரிஷம். | உத்திராடம் |
| திருவாதிரை | திருவோணம் |
| புனர்பூசம். | அவிட்டம் |
| பூசம். | சதயம் |
| ஆயில்யம். | பூரட்டாதி |
| மகம். | உத்திரட்டாதி . |
| பூரம். | ரேவதி |
| உத்திரம். | அஸ்வினி |
| ஹஸ்தம் | பரணி |
| சித்திரை. | கார்த்திகை |
| சுவாதி. | ரோகிணி |
| விசாகம் | மிருகசீரிஷம் |
| அனுஷம். | திருவாதிரை |
| கேட்டை. | புனர்பூசம் |
| மூலம். | பூசம் |
| பூராடம். | ஆயில்யம் |
| உத்திராடம் | மகம் |
| திருவோணம். | பூரம் |
| அவிட்டம். | உத்திரம் |
| சதயம். | ஹஸ்தம் |
| பூரட்டாதி. | சித்திரை |
| உத்திரட்டாதி. | சுவாதி |
| ரேவதி. | விசாகம் |















