இந்தியா
தங்கம், வெள்ளி, வைரம் மீதான வரிகள் உயர்வு.. தங்கம் விலை உச்சம் செல்ல வாய்ப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022-23 பட்ஜெட்டை தாக்கல் செய்துவரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரி குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் தங்கம் வெள்ளி விலைகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்புக்கு எதிராக தங்கம் மற்றும் தங்கம் வெள்ளி வைரம் ஆகியவை இறக்குமதி செய்வதற்கான வரிகள் பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளதால் தங்கம் விலை உயர அதிக வாய்ப்பு உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்கனவே மிக அதிகமாக உயர்ந்துள்ள நிலையில் தங்கம் விலையை குறைக்க மத்திய அரசின் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தங்கம் வெள்ளி க்கு வரி உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சிகரெட் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து சிகரெட் விலையும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.