தமிழ்நாடு
பொறியியல் படிப்புக்கு இனி கணிதம், வேதியியல், இயற்பியல் தேவையில்லை: அதிரடி அறிவிப்பு!

பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த பல வருடங்களாக இருந்து வந்த நிலையில் தற்போது பிளஸ் டூ தேர்வில் எந்த குரூப் எடுத்து எந்த பாடங்களை படித்திருந்தாலும் பொறியியல் படிக்கலாம் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் இல்லை என்றாலும் பொறியியல் படிக்கலாம் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி கணிதம் இயற்பியல் வேதியியல் பாடங்களை படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம் என்றும் இந்த நடைமுறை 2021-2022 கல்வி ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், பயோ டெக்னாலஜி, வேளாண்மை, வணிகம், தொழில்முனைவு, தொழிற்கல்வி ஆகிய 12 பாடங்களில் ஏதாவது மூன்று பாடங்கள் படித்திருந்தால் போதும் என்பதும் இவற்றில் மூன்று பாடங்களில் 45 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தால் பொறியியல் படிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு சந்தோசமா அல்லது துக்கமா? என்பதை போகப்போக தான் பார்க்க வேண்டும்.























