இந்தியா
நந்திகிராம் தொகுதியில் போட்டியில்லை: மம்தா பானர்ஜியின் திடீர் அறிவிப்பு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் என்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென மக்கள் விரும்பாவிட்டால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாபனிபூர் என்ற தொகுதியில் தான் கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இந்நிலையில் இந்த முறை அவர் தொகுதி மாறியிருப்பதாகவும் நந்திகிராம் தொகுதியில் தான் அவர் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து மம்தா பானர்ஜி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியில் அவர் போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவார் என்பதற்காக தொகுதி மாறுகிறார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் மக்கள் விரும்பாவிட்டால் நந்திகிராம் தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்றும் உங்களுடைய மகளாக நினைத்தால் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















