இந்தியா
மம்தாவின் ஹிட்லர் ஆட்சி… அமித் ஷா கடும் தாக்கு!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹிட்லர் போன்று ஆட்சி நடத்துகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

#image_title
மேற்கு வங்கத்தின் பிர்பூமின் சியூரி நகரில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, 2024-இல் பாஜகவுக்கு 35 இடங்களுக்கு மேல் வெற்றியை கொடுத்து மீண்டும் மோடியை பிரதமராக்கி மம்தாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மம்தா மற்றும் அவரது மருமகனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி பாஜக ஆட்சி அமைப்பதுதான்.
முதல்வர் மம்தா பானர்ஜி ஹிட்லர் போன்ற ஆட்சியை நடத்துகிறார். ஹிட்லர் போன்ற ஆட்சியை தொடர பாஜக அனுமதிக்காது. வாக்காளர்களாகிய நீங்கள் அதை தடுக்க முடியும். மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் பாஜகவை சேர்ந்த ஒருவர்தான். மம்தாவால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முடியுமா? காஷ்மீர் தீவிரவாதத்தை ஒழிக்க முடியுமா? மோடியால் மட்டுமே இவை முடியும். மம்தா பானர்ஜியின் ஒரே நோக்கம் அவரது மருமகனை அடுத்த முதல்வராக்குவது. ஆனால் அந்த குடும்ப ஆட்சியை மோடியால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும் என கடுமையாக விமர்சித்தார்.