வீடியோ
கலையரசனின் ’முகம்’ இதுதானா?
Published
4 years agoon
By
seithichurulமெட்ராஸ் புகழ் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள முகம் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கலையரசன். மெட்ராஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள முகம் படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் டி பிரசாத் இயக்கத்தில் த்ரில்லர் மற்றும் ஹேக்கிங் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அருந்ததி நாயகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீப காலமாக நடிப்புப் பக்கம் தனது கவனத்தை திருப்பி வருகிறார். இந்த படத்திலும் ஹீரோவுக்கு நிகரான ரோலில் நடித்து அசத்துகிறார்.
இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக டிரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
You may like
சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!
நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
மாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா?
தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழா படங்கள்!
சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரெய்லர்!
ஜி.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’திரைப்பட டிரெய்லர்!