வீடியோ
சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

தீபாவளிக்கு சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப் படும் நாங்க ரொம்ப பிஸி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
கன்னடத்தில் வெளியான மாயா பஜார் 2016 படத்தின் தமிழ் ரீமேக் தான் நாங்க ரொம்ப பிஸி. 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மொடி திடீரென அறிவித்த பணம் மதிப்பு நீக்கம் அறிவிப்பிற்குப் பிறகு நடைபெற்ற பணம் பதுக்கல், மோசடிகள் குறித்து காமெடியாக சொல்லப்படும் கதையே நாங்க ரொம்ப பிஸி.
யோகி பாபு, பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், விடிவி கனேஷ், ரித்திகா சென் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சுந்தர் சி இயக்கியுள்ளார்.
சன் டிவி சீரியல்களை தயாரித்து வரும் சன் எண்டெர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது.