இந்தியா
எல்.ஐ.சி பங்குகள் பட்டியல்: முதல் நாளே ஏமாற்றத்திற்குள்ளான முதலீட்டாளர்கள்!

சமீபத்தில் எல்ஐசி ஐபிஓ பங்குகள் வெளியிட்ட நிலையில் அந்த பங்குகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் போட்டி போட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று எல்ஐசி பங்குகள் முதல் நாளாக பட்டியலிடப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு குறைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகள் விற்கப்பட்டன என்பதும் பாலிசிதாரர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பங்குகளை வாங்க ஏராளமாக முன் வந்தனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தையில் அனுபவம் உள்ளவர்கள் இந்த பங்கை வாங்க எந்த வித ஆர்வமும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் இன்று பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே ஐந்து சதவிகிதத்திற்கும் மேல் குறைந்ததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரு பங்கு 949 ரூபாய் என்ற விலையில் 22 கோடியே 13 லட்சம் பங்குகள் விற்கப்பட்ட நிலையில் இன்று எல்ஐசியின் பங்குகள் வர்த்தகம் தொடங்கியது ஐந்து சதவிகிதத்திற்கும் மேல் குறைந்து உள்ளது. எல்.ஐ.சி பங்குகள் இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் எல்ஐசியில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.