கிரிக்கெட்
முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்த சிஎஸ்கே: நடையை கட்டிய சுப்மன் கில்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39வது போட்டியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் ஓவரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விக்கெட் எடுத்துள்ளது.
இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. சற்றுமுன் தொடங்கிய இந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து அந்த அணியின் சுப்மன் கில் மற்றும் வெங்கடேச ஐயர் களமிறங்கினர்.
முதல் ஓவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தீபக் சஹர் வீசினார். அதில் 3-வது 4-வது பந்தில் அதிரடி கில், 2 பவுண்டரிகளை அடித்த நிலையில் 5வது பந்தில் ஒரு எல்பிடபிள்யூ அவுட் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது அவுட் இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து ஆறாவது பந்தில் அதிரடியாக சுப்மன் கில் ரன் -அவுட் செய்யப்பட்டார். ஒரு ரன்னுக்காக சுப்மன் கில் ஓட முயன்றபோது அம்பத்தி ராயுடு மிக சிறப்பாக விக்கெட்டுக்கு பந்தை அடித்து ரன் -அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வரை கொல்கத்தா அணி 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றால் 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்று கொல்கத்தா அணி வென்றால் பெங்களூர் அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் இரு அணியிலும் விளையாடி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:
சென்னை: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், ஷர்துல் தாக்குர், தீபக் சஹார் மற்றும் ஹசில்வுட்
கொல்கத்தா: சுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, மோர்கன், நிதிஷ் ரானா, ரஸல், தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி,
















