சினிமா
சொதப்பிய விஸ்வரூபம் 2.. கலக்கத்தில் கமல்ஹாசன்

சென்னை: விஸ்வரூபம்-2 படம் சரியான வரவேற்பை பெறாததால் நடிகர் கமல்ஹாசன் கலக்கத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கடந்த 2013ல் பல பிரச்சனைகளுக்கு இடையில் விஸ்வரூபம் படம் வெளியானது. அப்போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.

கலக்கத்தில் கமல்ஹாசன்
சில முக்கியமான சஸ்பென்ஸ்களுடன் முதல் பாகம் முடிவடைந்தது. ஆனால் கடந்த வெள்ளைக்கிழமை வெளியான விஸ்வரூபம் 2 பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
அதேபோல் படம் குறித்து மிகவும் எதிர்மறையான கருத்துக்கள் வந்துள்ளது. இதனால், நடிகர் கமல்ஹாசன் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.





















