செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியற்றவர்களைக் குறித்து எப்படி ஆன்லைனில் புகார் அளிப்பது? முழு விவரம்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியற்றவர்கள் குறித்து புகார் அளிக்கும் புதிய வசதி!
தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய சமூக நலத்திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், ஏழை மற்றும் நடுத்தர மகளிரின் வாழ்க்கையை சுதந்திரமாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி பெற்ற குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் தற்போது 1.14 கோடி பெண்கள் பயனாளிகளாக உள்ளனர். ஆனால், இதில் சிலர் தகுதி இல்லாத நிலையில் தவறாகத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர் என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, தகுதியற்ற நபர்களை அறிவிக்க பொது மக்கள் ஆன்லைனில் புகார் அளிக்க முடியும் என புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
✅ ஆன்லைனில் புகார் அளிக்கும் முறைகள்:
👉 kmut.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
👉 “Complaints” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
👉 அது https://kmut.tn.gov.in/public_complaints.html என்ற பக்கத்துக்கு வழிவரும்.
👉 புகார் அளிப்பவரின் பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.
👉 தகுதியற்ற நபரின் பெயர், முகவரி, தாலுகா, மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும்.
👉 ஏன் அந்த நபர் தகுதி இல்லை என்பதை விளக்கமாக எழுதி விடவும்.
👉 கீழே உள்ள காரணப்பட்டியலில், ஏதேனும் பொருந்தும் காரணத்தை தேர்வு செய்யவும் (மொத்தம் 10 தகுதியிழப்பு காரணங்கள் உள்ளன).
👉 ஆதார ஆவணங்களை PDF அல்லது புகைப்படமாக பதிவேற்றம் செய்யலாம்.
👉 பிறகு “Get OTP” கிளிக் செய்து, மொபைலில் வந்த OTPயை உள்ளிட்டு புகாரை சமர்ப்பிக்கலாம்.
புகார் உறுதிப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்?
அதிகாரிகள், உங்கள் புகாரைச் சரிபார்த்து, அது உண்மையாக இருந்தால் பெண்ணின் பெயர் திட்டத்தில் இருந்து நீக்கப்படும்.
புகாரில் உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டால், யாரும் திட்டத்திலிருந்து நீக்கப்படமாட்டார்கள்.















