வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கைகா அணுமின் நிலையத்தில் வேலை!

மத்திய அரசின் கைகா அணுமின் நிலையத்தில் காலியிடங்கள் 137 உள்ளது. இதில் டெக்னீசியன், ஆராய்ச்சி உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 137
நிர்வாகம் : கைகா அணுமின் நிலையம்
வேலை செய்யும் இடம்: கர்நாடகம்
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: ஓட்டுநர் – 02
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: டெக்னீசியன் – 06
கல்வித்தகுதி: சர்வேயர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், ஃபிட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி, சம்பந்தப்பட்ட டெக்னீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வேலை: டெக்னீசியன் பயிற்சியாளர் – 34
கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: ஆராய்ச்சி உதவியாளர் – 44
வேலை: ஆராய்ச்சி உதவி பயிற்சியாளர் – 50
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 06.01.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://npcilcareers.co.in/KGSST2019/documents/advt.pdf?_ga=2.84764702.682159029.1576645395-464317252.1570079021 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.01.2020