சினிமா
ஜோக்கர் விமர்சனம்… மீண்டும் ஒருமுறை ஆஸ்காருக்கு தயாராகிவிட்டார் இந்த ஜோக்கர்…

ஜோக்கர் படத்துக்கான விமர்சனம் அல்ல… இது ஒரு அறிமுகம் என்று சொல்லலாம்… சில படங்களை நாம் தவறவே விடக்கூடாது என்று சொல்வோம். அப்படியான ஒரு படம்தான் இந்த ஜோக்கர். பீனிக்ஸின் அட்டகாசமான நடிப்பு… டோட் பிளிப்பின்சின் இயக்கம் இவற்றுக்காகவே இதைக் கொண்டாட வேண்டும்…
உலகியே ரசிகர்களுக்கு ஒரு வில்லனை பிடிக்கும் என்றால் அது ஜோக்கர் கதாபாத்திரத்தை வேறு எதுவாகவும் இருக்க முடியாது. இதுவரை ஜோக்கர் கதாபாத்திரத்தை 1989ல் வெளியான பேட் மேன் படத்தில் ஜாக் நிக்கோலஸ், 2008ல் வெளியான டார்க் நைட் படத்தில் ஹீத் லெட்ச்சர், 2016ல் வெளியான சூசைடு ஸ்குவாடு படத்தில் ஜாரெட் லெடோ ஆகியோர் செய்துள்ளனர். இது தவிர சில அனிமேசன் படங்களிலும் ஜோக்கர் கதாபாத்திரம் வந்துள்ளது. ஜோக்கர் கதாபாத்திரம் எந்த வடிவில் வந்தாலும் அந்தக் கதாபாத்திரம் எல்லோராலும் ரசிக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அந்தக் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம்.
ஜோக்கர் என்றால் பொதுவெளியில் அது ஒரு வெகுளி, தன்னுடைய வெகுளித்தனத்தால் எல்லோரையும் சிரிக்க வைக்கும் ஒரு கதாபாத்திரம். ஆனால், இந்த ஜோக்கர் எதன் மீதும் பற்று இல்லாமல், யார் மீதும் பாசம் இல்லாமல் முரட்டுத்தனமாக, கிறுக்குத்தனத்தோடு எப்போதும் குரூரத்தோடு வாழ்க்கையிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பதும்தான் ஜோக்கர்.

Joker Movie Review in Tamil
டிசி வடிவமைச்ச சூப்பர் ஹீரோக்களை எல்லாம் விட அதன் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது ஜோக்கர் கதாபாத்திரம் தான். இதற்கு காராணம் டார்க் நைட் படத்தில் ஜோக்கராக நடித்திருந்த ஹீத் லெட்சர் தான். அந்த ஒள்ளியான உருவத்தை வைத்து மிரட்டியிருப்பார் மனுசன். அந்த சிரிப்பு, அவரது குரல் எல்லாம் எப்போது பார்த்தாலும் ஒரு பயத்தை ரசிகனிடம் ஏற்படுத்திவிடும். முதல் ஜோக்கர் கதாபாத்திரத்தை நான் பார்த்ததில்லை. அதற்கு அடுத்து அந்த சூசைடு ஸ்குவாடிலும் ஜோக்கர் கதாபாத்திரம் அதன் தன்மையில் மாராமல் ஓரளவு சிறப்பாகவே செய்திருப்பார் ஜாரெட்.
இப்போது வெளியாகி இருக்கும் ‘ஜோக்கர்’ படம் ஆர்தர் பெளிக்ஸ் என்ற கல்யாணம் ஆகாத நடுத்துர வயதானவர் உடல்நிலை சரியில்லாத தன் அம்மாவிற்காகவே திருமணம் ஆகாத பாசக்காரர். யாராவது தன்மீது அக்கறை காட்டிவிட மாட்டார்களா என ஏங்கும் ஒருவர் சாமானியர். எல்லோராலும் அவமானத்துக்கும் தவிர்ப்புக்கும் உள்ளாகும் ஒரு மனிதன். ஏமாற்றம், துன்பம் என எல்லாத்தையும் அனுபவிக்கும் ஒருவன். “என் வாழ்நாளில் ஒரு நிமிடம் கூட சந்தோசத்தை அனுபவித்ததில்லை” என்று கூறும் ஒருவன். எப்படி ஜோக்கராக மாறினார் என்பதை சொல்கிறது. எப்படி அவ்வளவு குரூரமாக தன்னுடைய குணத்தை மாற்றிக்கொண்டது என்பதைச் சொல்கிறது.
இதில் ஜோக்கர் கதாபாத்திரத்தில் ஜாக்கின் பீனிக்ஸ் நடித்திருக்கிறார். கிளாடியேட்டர் படத்தில் நடித்த அதே பீனிக்ஸ் தான்… இது ஒரு கிளிசேவான வசனம் தான் என்றாலும் மனிதன் ஜோக்கராகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தனி மனிதனாக இந்தப் படத்தை அந்தச் சின்ன உடலில், தோளில் தூக்கி வெற்றி பெறச் செய்திருக்கிறார். ஜோக்கர் மீண்டும் ஒருமுறை ஆஸ்கார் வாங்கிவிடுவார். படத்தின் அடுத்த முக்கிய பலம் இசை. ஜோக்கரின் உணர்வுகளை காட்சிகளுக்கு நிகராக இசையும் பார்வையாளனிடம் கடத்திச்செல்கிறது. வசனம், இயக்கம் என எல்லா வகையிலும் இந்த ஜோக்கர் ஒரு அட்டகாசமான படமாக வந்திருக்கிறது.

Joker Movie Review in Tamil
டிசி.யின் கதாபாத்திரம் தான் ஜோக்கர், தாமஸ் வெயின், ப்ரூஸ் வெயின் (பேட் மேன் காதாபத்திரம், சிறு வயது) கௌதம் சிட்டி என பேட் மேன் படங்களில் வரும் எல்லாமும் வருகின்றன. இது ஜோக்கர் கதாபாத்திரம் உருவான விதமும் தான் என்றாலும் முந்தைய படங்களைப் பார்த்திருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. இதை தனியாகப் பார்த்தாலும் இது நமக்குப் புரியும்.
ஜோக்கர் கதாபாத்திரத்தின் மனச்சிக்கலை, அதன் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும் நிச்சயம் புரிந்துகொள்வோம்.
ஒருவருடைய குணத்தை சொல்ல வேண்டும் என்றால் அவர் எல்லாத்துக்கும் கோபப்படுபவர், பயப்படுபவர், வாழத்தெரியாதவர், பணத்தின் பின்னாடி செல்பவர் என ஒன்றை அடையாளமாகச் சொல்லுவோம். அப்படி ஒருவருடைய அடையாளமாக ஒன்று மாறுவதற்குக் காரணம் அவர் காரணமல்ல. அவரைச் சுற்றி இருக்கும் சமூகம் தான் முழுமுதற்காரணம். ஜோக்கர் இப்படி மாறுவதற்கு காரணமும் அந்த சமூகம் தான். இதை அழுத்தம் திருத்தமாக அட்டகாசமாக சொல்லியிருக்கும் படம் தான் ஜோக்கர்…
டிசி ஃபேன் மட்டும் அல்ல… மார்வெல் ஃபேனுக்கும் இந்த ஜோக்கரும் பிடிக்கும். ஹீத் லெச்சரை இந்த பீனிக்ஸ் மறக்கடிப்பார்.

Joker Movie Review in Tamil
பி.கு. தியேட்டரில் 2டியில் முழு திரையில் தெரியவில்லை. அதனால் ஐ மேக்ஸில் சென்று பார்த்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்…