வணிகம்
ஒரே நாளில் 9 பில்லியன் டாலர் செல்வ மதிப்பினை இழந்த ஜெப் பிசோஸ்!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவினால் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் மற்றும் அமேசான் நிறுவனருமான ஜெப் பிசோஸ் ஒரே நாளில் 9.1 பில்லியன் டாலர் செல்வ மதிப்பினை இழந்துள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தெரிவித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் உலக டாப் 500 கோடீஸ்வரர்களின் செல்வ மதிப்பு 99 பில்லியன் டாலர் வரை குறைந்துள்ளது.
ஜெப் பிசோஸின் செல்வ மதிப்பு ஜூலை மாதத்தில் இருந்து 145.2 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. ஜெப் பிசோஸ் அவர்களின் செல்வ மதிப்பு 4.5 பில்லியன் டாலர் வரை சரிந்துள்ளது என்றும் ப்ளூம்பெர்க் தரவுகள் கூறுகின்றன.






















