சினிமா செய்திகள்
காப்பானுக்கு பயந்தானா அசுரன்?

தனுஷ் நடித்து வரும் அசுரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி வெளியீடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தை அடுத்து தனுஷ் நடித்துக்கொண்டிருக்கும் படம் அசுரன். வெக்கை நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து சினேகா, மஞ்சு வாரியர், யோகி பாபு, குருசோமசுந்தரம், பசுபதி, பாலாஜி சக்திவேல் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதியும் நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதம் செப்டம்பர் 20ம் தேதி காப்பான் படத்துடன் அசுரன் வெளியாகும் என கருதப்பட்ட நிலையில், தற்போது அசுரன் ரிலீஸ் தேதி அக்.,2ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.















