Connect with us

பர்சனல் பைனான்ஸ்

வாகனம் தொலைந்துவிட்டதா? உங்களிடம் இது இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா?

Published

on

நம்மிடம் உள்ள பொருட்கள் திருடு போவது என்பது எப்போதாவது நடைபெறும் ஒன்று. அப்படி நாம் வைத்திருக்கும் கார் அல்லது இரண்டு சக்கர வாகனங்கள் தொலைந்து போனால், அதனுடைய அசல் சாவி இல்லாமல் இன்சூரன்ஸ் பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று தெரியுமா உங்களுக்கு?

பொதுவாக இன்சூரன்ஸ் வாகன திருடு மற்றும் உரிமையாளர் கவனக் குறைவு என இரண்டுக்கும் நன்மை அளிக்கும். ஆனால் இது போன்ற சூழலில் இரண்டு அசல் சாவிகளையும் அளிக்கும் போது அது வாகன உரிமையாளர் எந்த ஒரு மோசடியிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்யக்கூடிய முக்கிய ஆதாரமாக இருக்கும்.

இப்படி சாவியை சமர்ப்பிக்கும் போது போலி சாவியையோ, பிற கார்களின் சாவியையோ சமர்ப்பித்தாலும் வாகன உரிமையாளருக்குச் சிக்கலை ஏற்படுத்தும்.

எனவே சரியான முறையில் வாகனங்களின் சாவியை கையாள்வது எப்படி? என இங்கு பார்ப்போம்.

1) பொதுவாக ஒரு சாவியை மட்டுமே பயன்படுத்துவது நம்முடைய பழக்கமாக இருக்கும். எனவே ஒரு சாவி தேய்ந்தோ? திருட்டோ அல்லது உடைந்து போனால் தான் நாம் இரண்டாம் சாவியை பயன்படுத்துவோம்.
2) சாவி உடைந்தோ, தேய்ந்து போனாலோ அதனையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இன்சூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் தான்.
3) ஒருவேலைச் சாவி தொலைந்து போனால் உடனே வாகனத்தின் பூட்டையே மாற்றுவது நல்லது என்று வல்லுநர்கள் ஆலோசனை வழங்குகின்றார்கள்.
4) இல்லை என்றால் சாவி தொலைந்துவிட்டது என்று காவல் நிலையத்தில் முதல் தரவு அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் டூப்ளிகேட் சாவிக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவேலை டூப்ளிகேட் சாவி வாங்கவில்லை என்றாலும் முதல் தரவு அறிக்கை போன்ற ஆவணங்கள் வாகனம் திருடு போகும் போது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?