கிரிக்கெட்
ரஹானேதான் இனி டெஸ்ட் அணி கேப்டனா..? – ஆஸி.,க்கு எதிராக அதிரடி சதம் #Video

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா, அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டினார்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும், போகப் போக நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 277 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தொடர்ந்து களத்தில் இருக்கிறது.
இந்தியாவுக்காக, இந்தப் போட்டியில் கேப்டனாக பதவியேற்றிருக்கும் அஜிங்கியே ரஹானே, சதம் விளாசி அசத்தினார். கேப்டன் விராட் கோலி இல்லாத நேரத்தில் அணியைத் திறம்பட வழிநடத்தியது மட்டுமில்லாமல், சதம் விளாசி அசத்தியுள்ள ரஹானேதான், இனி அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்கிற குரல்கள் எழ்ந்துள்ளன. இதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.
ரஹானே சதம் விளாசி அந்த தருணம் இதோ: