வணிகம்
பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு முதன் முறையாக நட்டம் அடைந்த இண்டிகோ!

பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு முதன் முறையாகக் காலாண்டு அறிக்கை வெளியீட்டில் நட்டத்தினைப் பதிவு செய்துள்ளது.
2018-2019 நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் 652 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளது. 2015-ம் ஆண்டு இண்டிகோ நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு பதிவு செய்த முதல் காலாண்டு நட்டம் இதுவாகும்.
குறைந்த விலையில் விமானப் பயணம் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்துச் சந்தையினைத் தன் வசம் வைத்துள்ள இண்டிகோ விமான எரிபொருள் விலை உயர்வு, ரூபாய் மதிப்புச் சரிவு மற்றும் போட்டி காரணங்களால் லாபத்தினை இழந்து நட்டத்தினைப் பதிவு செய்துள்ளது.
லாபம் சரிந்த அதே நேரம் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இண்டிகோவின் வருவாய் 17 சதவீதம் உயர்ந்து இரண்டாம் காலாண்டில் 6,185 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது.
இதனை அடுத்து இந்தியாவின் அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் நட்டத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


















