இந்தியா
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க் கப்பல் INS VIKRANT சோதனை ஓட்டத்தில் வெற்றி!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி கப்பல் ஐஎன்சி விக்ராந்த் (INS VIKRANT) 5 நாட்கள் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து கொச்சி திரும்பியது.
கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தில் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் கட்டுமான பணிகள் அண்மையில் முடிந்தன.

தொடர்ந்து சென்ற புதன்கிழமை கொச்சியைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
ஐஎன்எஸ் விக்ராந்த் தான் நாமே வடிவமைத்து, தயாரித்து, கடலில் வெள்ளோட்டம் செய்யப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க் கப்பல். முதல் சோதனை ஓட்டத்திலேயே ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை முழு வேகத்தில் இயக்க முடிந்தது. அடிப்படை தொழில்நுட்பங்கள் அனைத்தும் சோதனை ஓட்டத்தில் சரிபார்க்கப்பட்டது என வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா தெரிவித்தார்.

சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 59 மீட்டர் உயரம் என 40 ஆயிரம் டன் எடைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து மிக் 21k ஹெலிகாப்ட்டர்கள், கமோவி 31 ஹெலிகாப்ட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியும். அதிகாரிகள், வீரர்கள், பிற ஊழியர்கள் என சுமார் 1700 நபர்கள் தங்கி, பணிபுரியும் வகையில் 2300 அறைகள் ஐஎன்எஸ் விக்ராந்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ஐஎன்எஸ் விகராந்த் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
‘ஆத்மா நிர்பார் பாரத்’ மற்றும் இந்தியக் கடற்படையின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் கீழ் 76 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டுப் பொருட்களுடன் ஐஎன்எஸ் விக்ரந்த் போர் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Proud & historic day for India as the reincarnated #Vikrant sails for her maiden sea trials today, in the 50th year of her illustrious predecessor’s key role in victory in the #1971war
Largest & most complex warship ever to be designed & built in India.
Many more will follow… pic.twitter.com/6cYGtAUhBK— SpokespersonNavy (@indiannavy) August 4, 2021













