இந்தியா
மகாராஷ்டிராவில் கோர ரயில் விபத்து: 11 பேர் உடல் சிதறி பலி

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்கான் பகுதியில் பயணிகளை நடுங்கவைத்த ஒரு கோரமான ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பயணிகள் இறங்கியபோது, கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புஷ்பக் ரயிலில் தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பயத்தில் சிலர் ரயிலிலிருந்து தாறுமாறாக இறங்கியுள்ளனர். அந்த நெரிசலில் அவர்கள் அருகிலேயே வேகமாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயிலால் மோதப்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் 11 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வில், ரயில்வே அலுவலர்கள் மற்றும் பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.























