தமிழ்நாடு
4 மாவட்டங்களில் மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
மேலும் தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி விட்டன என்பதும் இதனால் விவசாயிகள் மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீர் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் தொடர்ச்சியாக மழை குறித்த அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்ஸி காரணமாக இன்று தமிழகத்திலுள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நீலகிரி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் உள்ளது.








