வணிகம்
100% மானியத்தில் இலவச கோழிக் கொட்டகை – அரசு வழங்கும் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு அரசு, நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருமானத்தை உயர்த்தவும் இலவசமாக கோழி கொட்டகை அமைத்துத் தரும் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், முழுமையான மானியத்துடன் புதிய கோழி பண்ணையை அமைக்கலாம்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
100% மானியம் – அதிகபட்சம் ₹10 லட்சம் வரை வழங்கப்படும்
50% கட்டட வேலைக்கு, மற்ற 50% ஷெட் அமைப்புக்கு வழங்கப்படும்
இந்த திட்டம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் (MGNREGS) கீழ் செயல்படுகிறது
விண்ணப்பிக்கும் இடங்கள்:
உங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை
மாவட்ட கலெக்டர் அலுவலகம்
DRDA (District Rural Development Agency) அலுவலகம்
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:
குறைந்தது 50 நாட்டுக் கோழிகளை 6 மாதமாக வளர்த்து இருக்க வேண்டும்
சொந்த இடம் இருக்க வேண்டும்
மனித குடியிருப்புகளிலிருந்து தகுந்த தூரத்தில் இருப்பது அவசியம்
மின் இணைப்பு இருக்க வேண்டும்
அதே கிராமத்தில் நிரந்தரமாக வசிக்க வேண்டும்
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை நகல்
நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல்
வங்கி பாஸ்புக் நகல்
கோழி வளர்ப்பு தொடர்பான தகவல்கள்
திட்டத்தின் நோக்கம்:
கிராமப்புற மக்களுக்கு சுயதொழிலில் ஆதரவளிக்க
குறைந்த முதலீட்டில், குறுகிய காலத்தில் உண்மையான வருமானம் வழங்க
ஊர்வழிப் பொருளாதாரத்தை வளர்க்க

















