தமிழ்நாடு
சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக இ-பட்ஜெட்: ஒவ்வொரு எம்.எல்.ஏ முன்பும் ஒரு கம்ப்யூட்டர்

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக உ-பட்ஜெட் அறிமுகம் செய்யப்படுகிறது. இதுவரை காகிதங்களில் பிரிண்ட் செய்யப்பட்டு அனைவருக்கும் ஒரு பிரதி கொடுக்கப்பட்டு பட்ஜெட் வாசிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக ஒவ்வொரு எம்எல்ஏக்கள் முன்பும் ஒரு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கும்போது அந்த கம்ப்யூட்டரில் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இதற்காக அனைத்து எம்எல்ஏக்களின் நாற்காலிகளுக்கு முன்பாக கம்ப்யூட்டர் வைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. அது மட்டுமின்றி தமிழக பட்ஜெட் வரலாற்றில் முதல் முறையாக விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 13ஆம் தேதி பொது பட்ஜெட்டும் அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன என்பதும் இந்த பட்ஜெட்டுக்களை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பட்ஜெட் குறித்த புத்தகங்களும் வழங்கப்படும் என்பதும் அதில் நிதிநிலை அறிக்கை, துறைவாரியான மானியக் கோரிக்கைகள் ஆகியவை இடம்பெற்று இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
தமிழக பட்ஜெட் வரலாற்றில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















