வணிகம்
80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் பென்சன் – மத்திய அரசின் புதிய நலத்திட்ட அறிவிப்பு!

மத்திய அரசின் புதிய அறிவிப்பு: 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் பென்ஷன் வழங்கப்படும்!
ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், வேலைவாழ்க்கையின் இறுதியில் நிதி பாதுகாப்பை வழங்கும் முக்கிய திட்டமாகும். இந்தத் தொகை, பணியில் இருக்கும் காலத்தில் ஊழியர்களால் மற்றும் நிறுவனத்தால் சேர்த்து வைக்கப்படும் மற்றும் ஓய்வு பெற்ற பின்னர் மாதந்தோறும் பென்சனாக வழங்கப்படும்.
இந்நிலையில், மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 80 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு “கருணை உதவித்தொகை” என்ற பெயரில் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் படி,
80 முதல் 100 வயதுக்கு மேல் உள்ள ஓய்வூதியதாரர்கள், அவர்களது அடிப்படை ஓய்வூதியத்தில் 20% முதல் 100% வரை கூடுதல் பென்சன் பெற முடியும்.
இந்த உதவித்தொகை, அவர்களது வயதையும், வாழ்வுச்செலவையும் கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது.
இதன் மூலம், மருத்துவம், உணவு மற்றும் பிற தேவைகளுக்கான செலவுகளை சமாளிக்க வழி ஏற்படும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நெகிழ்வான முயற்சியாக பார்க்கப்படுகிறது.


















