இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.09.2026

- சபரிமலை கோயிலில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்திருந்த தங்க கிரீடம் திருட்டு. போலி கிரீடத்தை வைத்துவிட்டு அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் திருடப்பட்டுள்ளது.
- 48 மணி நேரத்துக்குள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்யாவிட்டால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கும். – அபிஜித் தீப்கே.
- நாம் பயன்படுத்தும் சோப்பு ஷாம்பு மற்றும் அழகு சாதன பொருள்கள் சைவமா? அசைவமா? என்பதை கட்டாயமாக நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பச்சை புள்ளி – சைவம். சிவப்பு (அ) பழுப்பு நிற புள்ளி – அசைவம் என குறிப்பிடப்பட்டிருக்கும். சைவம் என்றால் தாவரங்கள் மற்றும் இயற்கை பொருள்களில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கும். அசைவம் என்றால் அசைவ மூலப் பொருள்களில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கும்.
- பல்வேறு கோரிக்கைகளை வலயுறுத்தி அணைத்து வங்கி ஊழியர்கள் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தொடர் வேலை நிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
- நாளை (செப்.26) முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக் கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் டெல்லி காவல்துறை ஆணையருக்கு விண்ணப்பம். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை கைது செய்து அந்த இடத்திற்கு ஊரடங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவை ஆசிரியர்கள் முதலில் சாப்பிட்டு சோதித்த பிறகே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும் என பள்ளிக்கல்வித்தறை உத்தரவிட்டுள்ளது.
- சூப்பர் எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்கக்கூடும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல்! கடுமையான வெப்பநிலை மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து ஆய்வு எச்சரிக்கை.




