சினிமா
விஷால் – ஆர்யா இணைந்து மிரட்டும் ‘எனிமி’ – தெறி மாஸ் டிரெய்லர் வீடியோ…

‘அவன் இவன்’ படத்திற்கு பின்னர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த திரைப்படம் ‘எனிமி’. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஹீரோவாக விஷாலும், வில்லனாக ஆர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்தில் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை துபாயில் படம் பிடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளர்.
ஏற்கனவே ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ள நிலையில், எனிமி திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.