தமிழ்நாடு
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஈபிஎஸ் ராஜிநாமா செய்ய வேண்டும்: தயாநிதி மாறன்!

மக்களவை தேர்தல் 2019-ல் போட்டியிட்ட 38 தொகுதிகளில் அதிமுக 1 தொகுதியைத் தவிரப் பிற இடங்களில் எல்லாம் தோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றிபெற்றதற்குப் பணமும், அதிகாரமும் தான் காரணம். மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தயாந்தி மாறன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் 38 இடத்தில் போட்டியிட்ட அதிமுக தேனியில் போட்டியிட்ட ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்தரநாத் குமார் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன், பாமகவின் சாம் பாலை எதிர்த்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்க்கடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.








