தமிழ்நாடு
சட்டமன்ற விதிகளை தளர்த்தி சென்னா ரெட்டி மீது பாய்ந்தார்கள்… இப்போது பத்தினிகள் ஆகிவிட்டார்கள்: அதிமுகவை விளாசிய துரை முருகன்!

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை கொண்டு வருவதற்கு வசதியாக அதற்கு முன்னர் சட்டசபை விதிகளில் ஆளுநர் தொடர்பான சில பதங்களை தளர்த்தும் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார் அவர் முன்னவர் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்.

#image_title
ஆளுநருக்கு சட்டமன்றத்தில் இருக்கும் பிரத்யேகங்களை நிறுத்தி வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றி, அதன் பின்னர் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தில் திமுக சார்பாக கருத்து தெரிவித்த துரை முருகன், இந்த தீர்மானத்தை சரியான நேரத்தில் கொண்டு வந்ததற்கும், நாகரீகத்தோடு காழ்ப்புணர்ச்சி சிறிதும் இல்லாமல் வாக்கியங்கள் அமைக்கப்பட்டதற்கும் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஏதோ ஆளுநர் எதிர்ப்பு தீர்மானம் என்று தகவல் வந்ததும் எதிர்க்கட்சிகள் துள்ளிக்குதித்து இது பஞ்சமா பாதகம் என்பதுபோல சொன்னார்கள். போகிறபோது, நீங்கள் சட்டமன்ற விதிகளை தளர்த்தி அல்லவா கொண்டு வருகிறீர்கள் என கூறினார்கள். சட்டமன்ற விதிகளை தளர்த்துவது எப்படி என்பதை கற்றுக்கொடுத்ததே அவர்கள் தான். இதே சட்டமன்ற விதிகளை தளர்த்திதான் சென்னாரெட்டி மீது பாய்ந்தார்கள். அதே சட்டமன்ற விதிகளை நாம் தளர்த்தும்போது பத்தினி ஆகிவிட்டார்கள் என அதிமுகவினரை விளாசினார் துரை முருகன்.