தமிழ்நாடு
சென்னையில் போக்குவரத்து திடீர் மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது என்பதும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பல மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக சென்னையில் உள்ள பல பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளநீரை அகற்றும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றது என்பதும் இதனால் சென்னை மீண்டும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி உள்ளதை அடுத்து அந்த நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை தி.நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை அடுத்து அது குறித்த பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தில் தற்போதைய நிலவரம் மழை பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்
சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் தி நகர், பசூல்லா சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலை – வாணி மஹால் சந்திப்பிலிருந்து பசூல்லா நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது














