செய்திகள்
குரங்குக்கு மூச்சு கொடுத்து உயிர் தந்த ஓட்டுனர்.. இறுதியில் நேர்ந்த சோகம்(வீடியோ)….

நாய்கள் துரத்தியதில் மயக்கமடைந்து மூர்ச்சையான குரங்கை ஓட்டுனர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தி காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
இந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்துள்ள ஓதியம் கிராமத்தில் சுற்றி திரிந்த குரங்கு ஒன்றை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தி கடிக்க முயன்றது. இதில் பயந்து போன குரங்கு அங்கும் இங்கும் ஓடியது. ஒரு கட்டத்தில் மரத்தில் மீது அமர்ந்து கொண்டது. ஆனால், வேகமாக ஓடியதில் மூச்சு திணறி மரத்திலேயே மயங்கியது.
அந்த பக்கம் வந்த கார் ஓட்டுனர் பிரபு இதைக்க்கண்டார். குரங்கை காப்பாற்ற வேண்டுமென முடிவெடுத்த அவர் குரங்கை கீழே இறக்கி மார்பில் வைத்து கை வைத்து அழுத்தினார். மேலும், தரையில் வைத்து நெஞ்சில் கை வைத்து அழுத்தி மூச்சு கொடுத்து முதலுதவி செய்தர். அதன்பின் வனத்துறையினர் அந்த குரங்கை மீட்டு பெரம்பலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அந்த குரங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஓட்டுனர் பிரபு அந்த குரங்கை காப்பாற்றிய வீடீயோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. எனவே, பலரும் அவரின் செயலை பாராட்டினர். நடிகர் சிவகார்த்கியேயன் இந்த வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்து ‘பிரபு சார் நீங்க கிரேட்’ என பதிவிட்டுள்ளார்.
நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்குக்கு, வாய் வைத்து மூச்சு கொடுத்து முதலுதவி செய்த ஓட்டுநர்!#Monkey | #Viral pic.twitter.com/KjqNtRuH2V
— Bhoomi Today (@bhoomitoday) December 13, 2021