ஆரோக்கியம்
மஞ்சள் பால் குடித்தால் புற்றுநோயை வருவதைத் தடுக்கலாம்!

உடலின் கொழுப்பு மற்றும் திசுக்களில் உறிஞ்சப்படுவதால், அது உடலுக்கு நன்மை பயக்கிறது.
பாலில் மஞ்சன் கலந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
புற்றுநோய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
இந்த மஞ்சள் கலந்த பாலில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

yellow milk
மஞ்சள் கலந்த பால் தொண்டை கரகரப்பை போக்குகிறது.
இந்த பால் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
நம் உடலில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஆன்டி-ஏஜிங் எலிமென்ட்ஸ்களை மஞ்சள் கொண்டுள்ளது.
கேன்சருக்காக கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு சிகிச்சையின் எதிர்மறை விளைவுகளை குறைக்கவும் மஞ்சள் பால் உதவும்.
வலிகளுக்கு குறிப்பாக முதுகுவலிக்கு மஞ்சள் பால் சிறந்த தீர்வாகும். இது முதுகெலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தவும் உதவும்.
கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் உள்ளிட்ட மூட்டு மற்றும் எலும்பு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மஞ்சள் பால் நன்மை பயக்கும்.
மஞ்சள் பால் உடல் எடையை குறைக்கவும், உடல் பருமனை தடுக்க உதவும். அதிக எடை நபர் மஞ்சள் பாலை தொடர்ந்து குடிப்பதால் அவர் விரும்பும் படி எடையை குறைக்கலாம்.
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், பல்வேறு செரிமான பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல், இரைப்பை குடல் தொற்று, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் புண்கள் போன்றவை மஞ்சள் பால் குடிப்பதன் மூலம் குணமடையும். மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.