ஆரோக்கியம்
வெயிலைச் சமாளிக்க என்ன பண்ணலாம்?

வெயிலின் தாக்கம் அதிகம் ஏற்படும் போது, அதனைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம், ORS கரைசல் குடிக்கலாம்.
எலுமிச்சை, தர்பூசணி, கரணி போன்ற பழச்சாறுகளைப் பருகலாம், திராட்சை, வெள்ளரி போன்றவற்றைக் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம்.
கோடைக் காலத்தில் ஆரஞ்சு பழங்களை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தில் ஏராளமான நீர்ச்சத்து உள்ளது. இது நம் உடலை நீரிழப்புக்கு எதிராகப் போராட உதவுகிறது.
வெப்பத்திலிருந்து நிவாரணம் வழங்குவதில் பச்சைக் காய்கறிகளும், கீரைகளும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குறிப்பாகக் கோடைக் காலத்தில் மோர் குடித்தால், எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தாது.
நுங்கு உடல் நீரேற்றமாக இருக்கும். சரும நோய்கள் அண்டாது. ஐஸ் ஆப்பிள் என்று அழைக்கப்படும் நுங்கு, வெயில் காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக்கி அம்மை போன்ற நோய்களிலிருந்து தடுக்கிறது, மேலும் சூட்டுக் கொப்பளங்கள் வராமல் தடுக்கும்.

summer
நுங்கில் உள்ள நீர்த்தலின்மை மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். நுங்கு நீரை உடலின் மேல் தடவினால் வேர்க்குரு மறையும். இவைதான் நுங்கினால் கிடைக்கும் பலன்கள் வேறு யாராவது யூடியூபில் எதையாவது பேசினால் நம்பிவிட வேண்டாம். நுங்கு நீரை உடலின் மேல் தடவினால் வேர்க்குரு மறையும். இவைதான் நுங்கினால் கிடைக்கும்
இளநீர் குடிப்பதன் மூலம், உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். நீரிழப்பு பிரச்சனை இருக்காது.
பருத்தியிலான மெல்லிய உடைகளை அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.