Connect with us

ஆரோக்கியம்

உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்க இதைச் செய்யுங்கள்!

Published

on

உடலுக்குச் சரியான உணவும், மன ஆரோக்கியம் மிகவும் அவசியம். மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும். தினசரி போதுமான நேரம் தூங்கவில்லை எனில். மூளை மந்தமாகும் – தலைவலி எரிச்சல் ஏற்படும். கழிவு சேரும். செயல்பாடு மந்தமாகும்.

உடல் சுறுசுறுப்பு, மூளை நரம்புகள் ஆரோக்கியத்திற்கு…

பிரண்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி உப்பு, புளி, காரம் சேர்ந்து துவையலாக அரைத்துச் சாப்பிடலாம். இதனைச் சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும். மூளை நரம்புகள் பலப்படும். குடலில் உள்ள வாயுவை அகற்றி வெளியேற்றும். குழந்தைகளுக்குப் பிரண்டையைச் சாப்பிடக் கொடுத்த வந்தால் எலும்புகள் பலப்படும்.

முட்டை

நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது. தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

மூளைக்குத் தேவை “ஒமேகா 3”

மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும், இதய – ரத்த நோய்களைத் தடுக்கவும், கொழுப்புகளைக் கரைக்கவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் அவசியம்.

இந்த சத்து குறைந்தால் களைப்பு, கவனம் செலுத்துவதில் குறைபாடு, மூட்டு வலி மற்றும் பிடிப்பு, இதய ரத்தநாள பிரச்சனைகள், பார்வைப் பிரச்சனைகள் ஏற்படும்.

இச்சத்துக் குறைபாட்டை நீக்க வால்நட், ஃப்ளாக்ஸ் விதை, சியா விதை, டோஃபு, அவகாடோ பழம், சால்மன் – மத்தி மீன் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

நட்ஸ்

இதில் வைட்டமின் ஈ உள்ளது. நட்ஸ் வகையான பாதாம், முந்திரி, வேர்க்கடலை, அக்ரூட் பருப்புகள் போன்ற நட்ஸ்களில் வைட்டமின் ஈ உள்ளன. எனவே தினமும் ஒரு சில நட்ஸ் சாப்பிட வேண்டும். இவை மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கிறது.

ஸ்ட்ரா பெர்ரி

பெர்ரீஸ் பழங்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது நினைவாற்றல் மிக அதிகமாக அதிகரிக்கும். ஆண்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கும் புளு பெர்ரி மற்றும் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் வயதான செல்களில் ஏற்படும் ஒருவித ஸ்ட்ரெஸ்சை குறைப்பதிலும், மூளையின் சிக்னல் திறனை அதிகரிப்பதிலும் அரும்பங்கு ஆற்றுகிறது.

அறிவியல் தகவல்..!

மனிதனின் மூளை பல நுண்ணிய நரம்புச் செல்களாலானது. மனித மூளை பெருமூளை, சிறு மூளை, முகுளம் என 3 பகுதிகளை கொண்டது. பெருமூளை மனித நினைவாற்றலின் மையமாகச் செயல்படுகிறது.

மொழிகள், குறியீடுகளை உணர்ந்துகொள்ள உதவுகிறது. பெருமூளையின் இடப்பகுதி உடலின் வலப்பகுதி செயல்களையும். வலப்பகுதி உடலின் இடப்பகுதி செயர்களையும் கட்டுப்படுத்துகிறது. நினைவாற்றல், கற்பனைத் திறன், பகுத்தறிவு ஆகியவற்றுக்கு இருப்பிடமாக இருக்கிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?