தமிழ்நாடு
முக ஸ்டாலின் 68வது பிறந்த நாள்: தலைவர்கள் தொண்டர்கள் வாழ்த்து!

திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தனது 68வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் பிறந்த நாளை அடுத்து ஸ்டாலினின் சகோதரியும் திமுக எம்பியுமான கனிமொழி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: தலைவர் தளபதி அண்ணன் முக ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார். அவரது தலைமையில் அமையவிருக்கும் திமுக கழக ஆட்சியில் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் திமுக பிரமுகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை முக ஸ்டாலினுக்கு தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை அடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக சட்டமன்ற பொதுத் தேர்தலை தலைமையேற்று எதிர்கொள்ள இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதல்வர் பதவியை ஏற்பார் என்று திமுக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







