ஆன்மீகம்
தீபாவளி 2024: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம்… சனி பகவானின் அருள் சுழற்சி!

Diwali 2024 Rasipalan: சனி பகவானின் விசேஷ அருள் வழங்கப்படும் ராசிகள்
இந்த ஆண்டு தீபாவளி, அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 தேதிகளில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு, சனி பகவான் தனது திரிகோண ராசியான கும்பத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் தீபாவளி வருவது மிகவும் விசேஷம். இதனால் உருவாகும் ‘ஷஷ ராஜயோகம்’ மற்றும் ‘லஷ்மி நாராயண யோகம்’ சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும்.
சனி பகவான், நியாயத்தின் கடவுளாகவும், மிக முக்கியமான கிரகமாகவும் கருதப்படுகிறார். சனியின் அசைவுகள் பெரும் ஜோதிட நிகழ்வாகக் கணக்கிடப்படுவதால், இந்த ஆண்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யாவோ என்பதைக் காணலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் சஷ ராஜயோகம் மற்றும் லஷ்மி நாராயண யோகத்தின் காரணமாக பொருளாதாரம் உயரும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் வெற்றியும், பணியிடத்தில் மரியாதையும் உயரும். பழைய கடன்களில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நம்பிக்கையுடன் வெற்றிபெறுவார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் தீபாவளியில் உருவாகும் யோகங்களால் நிதி லாபம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் வெற்றியும், புதிய வாடிக்கையாளர்களின் வரவால் வியாபாரம் விரிவடையும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும்.
துலாம்:
துலா ராசிக்காரர்கள் சனி பகவானின் ஷஷ ராஜயோகம் காரணமாக நிதி நெருக்கடிகளில் இருந்து விடுபடுவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரத்தில் அதிக லாபம், கல்வியில் வெற்றியும் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் ஷஷ ராஜயோகம் மற்றும் லக்ஷ்மி நாராயண யோகத்தின் பலன் மூலம் பண வரவுகளை அதிகமாகக் காணலாம். வேலைக்கு பதவி உயர்வும், வணிகத்தில் முன்னேற்றமும் அடையலாம். நம்பிக்கை அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காணலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் ஏற்படும்.
சனி பகவானின் அருள் பெற சனி சாலிசா, ஹனுமான் சாலிசா அல்லது கோளாறு பதிகம் பாராயணம் செய்யலாம்.
















