சினிமா
கல்வியில கிடைக்கிற காசு, அரசியலில் கூட கிடைக்காது; வெயிட்டு காட்டும் வாத்தி ட்ரெய்லர்!

தமிழ் நடிகர்கள் சமீப காலமாக தெலுங்கு இயக்குநர்களின் படங்களில் நடிப்பதும். தெலுங்கு நடிகர்கள் தமிழ் இயக்குநர்கள் படங்களில் நடிப்பதும் வழக்கமாக மாறிவிட்டது.
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்திருந்தார். தீபாவளிக்கு வெளியான அந்த படம் படு தோல்வியை சந்தித்தது.

#image_title
இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஜய்யின் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களுடன் அந்த படம் 300 கோடி வசூலை தாண்டியது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ள வாத்தி படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தின் அசத்தலான ட்ரெய்லர் தற்போது வெளியாகி தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

#image_title
வங்கி கொள்ளையை மையமாக வைத்து வெளியான துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து கமிஷ்னராக நடித்த சமுத்திரகனி இந்த படத்தில் கல்வியை வைத்து வியாபாரம் செய்யும் வில்லனாக மாறி உள்ளார். வாத்தியாராக அட்வைஸ் பண்ணிட்டு வந்த சமுத்திரகனியை வில்லனாக மாற்றிய நிலையில், தனுஷ் அந்த வாத்தி வேலையை கச்சிதமாக எடுத்துக் கையாண்டு இருக்கிறார்.
ஹீரோயினாக வரும் வாத்தியாரம்மா சம்யுக்தா மேனன் அழகில் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கிப் போவது நிச்சயம். பேசாம அரசியலுக்கு வந்துடுன்னு சமுத்திரகனியை ஒருவர் அழைக்க கல்வியில கிடைக்கிற காசு அரசியலில் கிடைக்காது என சொல்லும் இடமாகட்டும். அட்டென்டன்ஸ்ல இருக்குற அத்தனை பேரும் கிளாஸுக்கு வருவாங்க என தனுஷ் பேசும் இடமாகட்டும் கைதட்டலுக்கு தியேட்டரில் பஞ்சமே இருக்காது. ஜிவி பிரகாஷ் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட் அடித்துள்ள நிலையில், பின்னணி இசையும் பிரித்து மேய்கிறது.

#image_title
இந்த வாத்தியும் நிச்சயம் வசூல் ரெய்டு விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெய்லரை பொறுத்தவரையில் படம் கன்ஃபார்ம் ஹிட் ஆகும் என்பதில் எந்தவொரு சந்தேகத்தையும் கொடுக்கவில்லை.