சினிமா செய்திகள்
படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட தனுஷ் பட நாயகி!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அநேகன் பட நாயகி அமைரா தஸ்தூர், படுகவர்ச்சியான புகைப்பட ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். மேலும், அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

தமிழில் அநேகன் படத்திற்கு பிறகு அமைரா தஸ்தூருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாலிவுட்டில் ஒரு சில படங்களிலும், ஹாலிவுட்டில் ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்திலும் நடித்தார்.
ஆனால், எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. நடிகர் சந்தானத்துடன் தமிழில் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனார். ஆனால், அந்த படம் எடுக்கப்பட்டதா? அல்லது டிராப் செய்யப்பட்டதா என்பதே தெரியவில்லை.
சர்வர் சுந்தரம் படத்தை போல அந்த படத்தின் நிலைமையும் வெளியே தெரியவில்லை.

இந்நிலையில், மீண்டும் பட வாய்ப்புகளை பெற இப்படியொரு போட்டோஷூட்டை அமைரா தஸ்தூர் எடுத்துள்ளார் என கமெண்டுகளும் பறந்து வருகின்றன.


















