சினிமா செய்திகள்
’கர்ணன்’ படத்தின் மாஸ் அப்டேட்; தனுஷின் வைரல் புகைப்படம்!

தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக இந்த படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து தனுஷ் தனது பகுதியின் டப்பிங் பணியை சமீபத்தில் தொடங்கிய நிலையில் இன்றுடன் அவர் தனது டப்பிங் பணியை முடித்து உள்ளார்.
இது குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் ’கர்ணன்’ படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் தனுஷ் மிகுந்த ஒத்துழைப்பு அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனுஷ் டப்பிங் பேசும் புகைப்படம் ஒன்றை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கர்ணன்’ படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததை அடுத்து கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் அந்த பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விடும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விரைவில் பின்னணி இசையமைக்கும் பணியை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#KarnanUpdate Dubbing is almost complete. @dhanushkraja at his best!
@KarnanTheMovie @Music_Santhosh @mari_selvaraj #KarnanArrivesOnApril pic.twitter.com/hR1HyGWF65— Kalaippuli S Thanu (@theVcreations) February 9, 2021



















