சினிமா செய்திகள்
தனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published
2 years agoon
By
Shiva
தனுஷ் நடித்து வரும் 43வது திரைப்படமான ‘D43’ என்ற படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் ‘D43’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘D43’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘D43’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகி இதுகுறித்த ஹேஷ்டேக்குகளை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ‘D43’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனுஷ், செல்வராகவன் இயக்கும் படத்திலும் அதனை அடுத்து சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார் என்பதும் இந்த இரண்டு படத்தையும் முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You may like
-
காலேஜ் படிக்கும் போது 70 சிகரெட்.. இயக்குநர் ஆனதும் 150 சிகரெட்.. வெற்றிமாறன் பேச்சு!
-
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
-
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!
-
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் சிம்பு படம் ரிலீஸா?
-
‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்
-
தனுஷூக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் மதுரை தம்பதிகள்: பின்னணியில் ரஜினியா?