Connect with us

இந்தியா

ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார்? சர்ச்சை ஆன ஆர்டிஐ கேள்வி?

Published

on

கோவிட்-19 தொற்று அதிகம் உள்ள பகுதியை அறிந்து, மக்கள் ஜாக்கிரதையாகப் பயணம் செய்ய உதவும் செயலி ஆரோக்கிய சேது.

கோவிட்-19 ஊரடங்கு காலத்தில், அரசு அலுவலக பணிக்கு வரும் ஊழியர்கள், தங்களது போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை நிறுவி இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

அண்மையில் இந்திய அரசின், இந்த ஆரோக்கிய சேது செயலி முறிச்சிக்கு உலக சுகாதார அமைப்பும் பாராட்டியது. இந்த ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலமாக, மத்திய மின்னணு அமைச்சகத்திடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலளித்த மத்திய மின்னணு அமைச்சகம், ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்று எங்களுக்குத் தெரியாது என பதில் அளித்துள்ளது. அது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆர்டிஐ கேள்விக்குச் சரியாகப் பதில் அளிக்காத நிலையில், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடி ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்று மத்திய தகவல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்று MyGov தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் பதில் அளித்துள்ளார்.

அதில் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்ற சந்தேகம் வேண்டாம். தேசிய தகவல் மையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இரண்டும் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கினர் என்று தெரிவித்துள்ளார். ஆனால் எந்த தனியார் நிறுவனம் அது என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை.

ஆரோக்கிய சேது செயலி இணையதளமும், தேசிய தகவல் மையம் தான் செயலியை உருவாக்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?